அதிகரிக்கும் வெப்பநிலை, மன அழுத்தம், பல மின்னணு சாதனங்களின் முன் அதிக நேரத்தை செலவிடுவது ஆகியவை நமது மன ஆரோக்கியத்தில் மட்டுமல்ல நமது உடல் நலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது மெதுவாக நமது சருமத்திலும் தெரிய தொடங்கும். காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொண்ட பிறகும், 8 மணி நேர ஆழ்ந்த உரக்கத்திற்கு பிறகும் உங்கள் சருமம் பொலிவிழந்து சோர்வாக காணப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுங்கள். இந்த இரண்டு பொருட்களை கொண்டு ஒரு முகப்பூச்சை (face pack) செய்தால் உங்கள் முகத்தில் நல்ல மாற்றத்தை காணலாம்.
ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி காபித்தூள் அல்லது காபி துகள்கள் (coffee granules) மற்றும் 2 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை கலந்துக் கொள்ளுங்கள்.
இரண்டையும் நன்றாக கலந்து உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசவும். இது 15 நிமிடங்கள் முகத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
பிறகு குளிர்ந்த தண்ணீரில் கழுவிவிட்டு சிறிது ஐஸ் கட்டிகளை முகத்தில் தேய்க்கவும்.
தேன் மற்றும் காபி ஆகியவை ஒன்றாக சேர்ந்து அதிசயங்களை செய்யும். காபி துகள்கள் ஒரு இயற்கையான ஸ்க்ரபாக செயல்படுவதோடு உங்கள் முகத்தை de-puff செய்யவும் உதவுகிறது. இந்த சேர்க்கை முகத்தில் உள்ள பருக்களையும் நீக்க உதவும். இறந்த சரும செல்களை நீக்க தேன் உதவும். மேலும் ஒரு இயற்கையான பளபளப்பையும் உங்கள் சருமத்துக்கு வழங்கும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் என வாரத்துக்கு மூன்று முறை இந்த முகப்பூச்சை செய்து வந்தால் நீங்கள் நிச்சயமாக மாற்றத்தை உணரலாம்.