திங்கள், 13 நவம்பர், 2017

மோடியை தரக்குறைவாக விமர்சிக்க மாட்டோம் - ராகுல்காந்தி November 12, 2017

Image

பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி ஒரு போதும் தரக்குறைவாக விமர்சிக்காது என காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, எதிர்கட்சியை சேர்ந்தவராக மோடி இருந்தபோது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை மரியாதை குறைவாக பல முறை விமர்சித்துள்ளதாக தெரிவித்தார்.

ஆனால் பாஜகவை போல் அல்லாமல் காங்கிரஸ் ஒரு மாறுபட்ட கொள்கைகளை கொண்ட கட்சி எனபதால் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும, நாட்டின் பிரதமர் என்பதால் மோடி குறித்து தரக்குறைவாக விமர்சிக்க மாட்டோம் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Related Posts: