
ஈராக் - ஈரான் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தௌயும் ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கின் குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள பென்ஜ்வின் என்ற பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஈராக்கை விட ஈரானின் கெர்மான்ஷா மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதனால், இடிபாடுகளுக்குள் சிக்கி 164 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, கெர்மான்ஷா மாகாணத்தில் பீதி காரணமாக மக்கள் வீதிகளில் குவிந்துள்ளனர்.