திங்கள், 13 நவம்பர், 2017

முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு! November 13, 2017

Image

நாமக்கல்லில் வரலாறு காணாத அளவில் முட்டை விலை 4.74 ரூபாய் காசுகளாக அதிகரித்துள்ளது.

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் முட்டை ஒன்றின் நேற்றைய பண்ணை கொள்முதல் விலையை 15 காசுகள் விலையை உயர்த்தி 4.74 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 

தமிழக கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை விலை 
இந்தளவிற்கு உயர்ந்தது இதுவே முதல் முறையாகும். வட மாநிலங்களில் கடும் குளிர்காலம் என்பதால் முட்டையின் நுகர்வும், விற்பனையும் அதிகரித்துள்ளதாகவும், மேலும் முட்டை உற்பத்தி 25 சதவீதம் குறைந்துள்ளதாலும் விலை உயர்ந்துள்ளதாக கோழிப்பண்னையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இது மேலும் சில வாரங்களுக்கு நீடிக்கும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். 

Related Posts: