வியாழன், 2 நவம்பர், 2017

வெளுத்துவாங்கும் வானம் - எங்கு எவ்வளவு மழை? November 1, 2017

Image

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் நேற்று அதிகமான மழை பதிவாகியுள்ள இடங்கள் குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னை பொன்னேரியில் 10 சென்டி மீட்டர் மழையும், கடலூரில் 9 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சென்னை பரங்கிப்பேட்டை மற்றும் சென்னை டிஜிபி அலுவலகத்தல் 7 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இதேபோல், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், நாகை மாவட்டம் சீர்காழி ஆகிய பகுதிகளில் 6 சென்டி மீட்டர் மழையும், சோழவரம், ஜெயங்கொண்டம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தலா 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 4 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

Related Posts: