கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை வலுவடைந்து வருவதாக தெரிவித்தார்.
இலங்கை மன்னார் வளைகுடாவில் நிலைக்கொண்டு இருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக வட மற்றும் தென் தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழை பெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேபோல் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலசந்திரன் குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்பதால் அரசுக்கு எச்சரிக்கை அளித்துள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.