ஞாயிறு, 12 நவம்பர், 2017

​குஜராத்தில் இன்று முதல் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை! November 11, 2017

Image

குஜராத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். 

குஜராத் மாநிலத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கும், டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில், 2 கட்டங்களாக வாக்குப்பதிவு  நடைபெறுகிறது. இதற்காக குஜராத் மாநிலம் முழுவதும் அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் ராகுல்காந்தி இன்று முதல் வடக்கு குஜராத்தின் வடக்கு மாவட்டங்களில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது கிராம மக்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து பேசுகிறார். பின்னர் பனஸ்கந்த் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அம்பிகா கோயிலுக்கு செல்கிறார்.

முன்னதாக தேர்தல் பிரச்சார களத்தில், பிரதமர் மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் சீரழிந்து விட்டதாக ராகுல்காந்தி பரப்புரை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts: