புதன், 15 நவம்பர், 2017

மாநில ஆளுநருக்கான அதிகாரங்கள் என்னென்ன? November 15, 2017

ஒரு மாநில ஆளுநருக்கான அதிகாரங்கள் என்னென்ன ? அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்கிறது என்பதை அறிவோம்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் 154-ன் படி, மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட விஷயங்களில் ஆளுநர் நேரடியாக முடிவெடுக்க முடியாது. ஆனால், எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் அமல்படுத்தப்படும்.

இதேபோல் அரசியலமைப்புச் சட்டத்தின் 160, 356, 357 ஆகிய பிரிவுகளின் கீழ் ஆளுனருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டும் தான் அவரால் மாநில அரசின் அதிகாரத்தில் தலையிட முடியும். அத்தகைய அதிகாரம் வழங்கப்படாத நிலையில், ஆளுனரால் அரசு அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தவோ, பணிகளை ஆய்வு செய்யவோ அதிகாரம் இல்லை. 

மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து ஆளுநருக்கு விளக்கம் தேவை என்றால் மாநில முதலமைச்சரை நேரில் அழைத்துக் கோரலாம் அல்லது தலைமைச் செயலாளர் மூலம் அறிக்கையாக கேட்டு விளக்கம் பெறலாம். 

ஆளுநர் நியமனம் மற்றும் அவருக்கான அதிகாரங்கள் தொடர்பாக, அரசியலமைப்பு சட்டம் 153 முதல் 162 வரை தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் முதல் குடிமகனாக குடியரசு தலைவர் திகழ்வது போல், மாநிலத்தின் தலைமைப் பொறுப்பு வகிப்பவராக ஆளுநர் திகழ்கிறார். நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதி அதிகாரங்கள் ஆளுநருக்கு உண்டு என்றாலும், அவர் எப்போது நேரடியாக தலையிடலாம் என்பதையும் அரசியலமைப்பு சட்டம் வரையறுத்துள்ளது.
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/15/11/2017/what-are-powers-governor

Related Posts: