வெள்ளி, 3 நவம்பர், 2017

உலக வங்கியின் அறிக்கை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ‘பகீர்’ கருத்து..! November 2, 2017

Image

உலக வங்கி வெளியிட்ட அறிக்கை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ள கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டிற்கான தொழில் தொடங்க உகந்த சூழல் நிலவும் நாடுகள் பட்டியலை சமீபத்தில் உலக வங்கி வெளியிட்டது. இதில் 30 இடங்கள் முன்னேறியுள்ள இந்தியா 100வது இடத்தை பிடித்துள்ளது. 

ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களே இந்த பட்டியலில் இந்தியா முன்னேற காரணமாக அமைந்ததுள்ளதாக உலக வங்கி கூறியிருந்தது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி அங்கு 3 நாள் சுற்றுப்பயணத்தை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நேற்று துவங்கினார்.

முதல் நாளான நேற்று குஜராத்தின் ஜம்புசார் பகுதியில் பேசிய ராகுல்காந்தி உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையை உதாசினம் செய்து கருத்து தெரிவித்தார்.

குஜராத்தில் தற்போது பாஜக அரசு இருக்கும் நிலையில் ராகுல், மாநில மற்றும் மத்திய அரசின் மீது குற்றச்சாட்டுகளை வைத்தார்.

நிதியமைச்சர் அருண் ஜெட்லி அயல்நாட்டு அமைப்பு ஒன்று தொழில் தொடங்க உகந்த சூழல் நிலவும் நாடுகள் பட்டியலில் இந்தியா 30 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளதை பற்றி கூறுகிறார், முதலில் அவர் சிறிய மற்றும் நடுத்தர தொழில் செய்யும் தொழில்முனைவோர்களிடம் பேசி உண்மையிலேயே தொழில் செய்ய உகந்த சூழல் நிலவுகிறதா என்பதை கேட்டு அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.

அயல்நாட்டு நிறுவனம் அளிக்கும் சான்று இந்தியாவிற்கு தேவையில்லை என்றும் ராகுல் குறிப்பிட்டார்.

ராகுலின் பேச்சை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளரும் மூத்த தலைவருமான அபிஷேக் சிங்வி இது தொடர்பாக பரபரப்பான கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அதில், தரகர்களை விலைக்கு வாங்கி  உலக வங்கி வெளியிடும் தொழில் செய்ய உகந்த சூழல் நிலவும் நாடுகள் பட்டியலில் எளிதாக மாற்றங்களை நிகழ்த்தலாம் ஆனால் இந்திய பொருளாதாரத்தில் பிரதமர் மோடி மற்றும் குழுவினர் ஏற்படுத்திய சேதத்தை சரிசெய்வது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார். 

கையூட்டு கொடுத்து உலக வங்கி வெளியிடும் அறிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 
காங்கிரஸ் அரசும் இப்பாடித்தான் தரகர்களை அமர்த்தி சர்வதேச அமைப்புகள் வெளியிடும் தரவரிசைகளில் மாற்றங்கள் செய்ததா எனவும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.

2014ல் பாஜக அரசு பொறுப்பேற்ற போது இந்தியா இப்பட்டியலில் 142வது இடத்தில் இடந்தது தற்போது 3 ஆண்டுகளில் 100வது இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.