வடகிழக்குப் பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை வெளுத்து வாங்கியது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இன்று காலை முதல் வெயில் காணப்பட்ட நிலையில், பிற்பகல் முதல் மீண்டும் மழை தொடங்கிய நிலையில், மாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இரவு 9 மணி முதல் இடி மின்னலுடன் கனமழை தொடர்கிறது. இதனால், சென்னை நகரப்
பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனிடையே, தேங்கிய மழைநீரை அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வழியே அளித்த பேட்டியில் தெரிவித்தார்.