
வெப்பச்சலனம் காரணமாக வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் நிலவுவதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்பு உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதன் நகர்வை வைத்தே மழைக்கான வாய்ப்பு இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மணிமுத்தாறில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.