
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக யாராவது கையை உயர்த்தினால், அந்த கையை வெட்டுவோம் என, பீகாரை சேர்ந்த பாஜக எம்பி நித்யானந்த் ராய் மிரட்டல் விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த வைஷ்யா சமூத்தினரின் பொதுக்கூட்டத்தில் அம்மாநில பாஜக தலைவரும், எம்பியுமான நித்யானந்த் ராய் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், பிரதமர் மோடிக்கு எதிராக யாராவது கையை உயர்த்தினாலோ, விரல்களை நீட்டினாலோ அதை வெட்டுவோம் என எச்சரித்தார். தற்போது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தான் தெரிவித்த கருத்துக்கு நித்யானந்த் ராய் வருத்தம் தெரிவித்துள்ளார்.