மியான்மர் நாட்டுக்கு எதிராக பொருளாதாரத் தடை மற்றும் ஆயுத விற்பனைக்கான தடைகளை அமல்படுத்தவேண்டும் என சர்வதேச பொதுமன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.
மியான்மர் ராணுவம் நடத்தும் தாக்குதல்களினால் பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிருக்குப் பயந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கிய இன மக்கள் அண்டை நாடான வங்கதேசத்துக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில், மியான்மர் அரசுக்கு எதிராக உலக நாடுகள் கருத்து தெரிவித்துவருகின்றன. இதைத் தொடர்ந்து, சர்வதேச சட்டங்களை மதித்து நடக்குமாறு மியான்மரை வலியுறுத்தியுள்ள சர்வதேச பொதுமன்னிப்பு சபை, அந்நாட்டுக்கு எதிராக பொருளாதாரத் தடை மற்றும் ஆயுத விற்பனைத் தடை விதிக்க உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளது. தாய்லாந்தில் பேசிய அந்த அமைப்பினி பிரநிதிகள் இதைத்தெரிவித்தனர்.