செவ்வாய், 21 நவம்பர், 2017

விமான பணிப் பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்புக் கோரிய இளைஞர்கள்! November 21, 2017

குடிபோதையில் விமான பணிப் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், அப்பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்புக் கோரிய வீடியோக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

ஹைதராபாத் ராஜிவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில், இண்டிகோ விமான பணிப் பெண்ணிடன் குடிபோதையில் இரு இளைஞர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அந்த இளைஞர்களை மடக்கிப் பிடித்தனர். இளைஞர்களின் செயலால் அதிர்ச்சி கலந்த கோவத்துடன் காணப்பட்ட அந்த விமான பணிப்பெண், அவ்விரு இளைஞர்களையும் தனது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட வலியுறுத்தினார்.




தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது அப்பணிப் பெண் போலீசில் புகார் ஏதும் அளிக்கவில்லை. இருவரும் மாணவர்கள் என்பதால் புகார் அளிக்க விரும்பவில்லை என விமான பணிப் பெண் தெரிவித்துள்ளார். இருப்பினும், இருவர் மீது அமைதிக்கு குந்தகம் விளைவித்த புகாரின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.