ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே, தமது பதவியே ராஜினாமா செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய அதிபராக முன்னாள் துணை அதிபர் எம்மர்சன் நாங்காக்வா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில், கடந்த 1980ஆம் ஆண்டு முதல் 37 ஆண்டுகளாக ராபர்ட் முகாபே, அதிபராக பதவி வகித்து வந்தார்.
தற்போது 93 வயதாகும் முகாபே, அண்மையில் துணை அதிபர் எம்மர்சன் நாங்காக்வா-வை பதவி நீக்கம் செய்தார். இதனால், ஆளும் ஷானு - பி.எப் கட்சியில் பிளவு ஏற்பட்டது. மேலும், ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து, முகாபே பதவி விலகுமாறு கோரிக்கை வலுத்தது. ஆனால், அவர் பிடிவாதமாக மறுத்து வந்தார். இந்நிலையில், முகாபே பதவி விலகிவிட்டதாக நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனால் ஜிம்பாப்வே மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.