புதன், 22 நவம்பர், 2017

​நித்யானந்தா - ரஞ்சிதா குறித்தான வீடியோ உண்மைதான் என அறிக்கை - நித்யானந்தாவிற்கு எதிராக போராட்டம்! November 22, 2017

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா இருக்கும் வீடியோ காட்சி உண்மைதான் என டெல்லி தடயவியல் மையம் அறிக்கை அளித்ததை தொடர்ந்து, கர்நாடகாவில் நித்யானந்தா ஆஸ்ரமத்திற்கு எதிரே கஸ்தூரி கர்நாடக வேதிகே அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2010ம் ஆண்டு வெளியான நித்யானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா ஆகியோர் இணைந்து இருக்கும் வீடியோ காட்சி  உண்மைதான் என டெல்லி தடயவியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.

இதனையறிந்த கஸ்தூரி கர்நாடக  வேதிகே அமைப்பினர் பிடதி ஆஸ்ரமம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அரசு இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நித்யானந்தாவிற்க்கு தண்டணை பெற்று தரவேண்டும் என்று போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர். 

Image

Related Posts: