ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் அடங்கிய பென் டிரைவை விசாரணை ஆணையத்தில் தினகரன் வழக்கறிஞர் ஒப்படைத்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராக டிடிவி தினகரனுக்கு கடந்த வாரம் சம்மன் அனுப்பப்பட்டது. அப்போது ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்கும்படி வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன் ஆஜரான டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆணையரிடம் சம்பந்தப்பட்ட அந்த பென் டிரைவை ஒப்படைத்தார்.
இந்நிலையில், தாங்கள் விரும்பாத அரசை தமிழக மக்கள் விரைவில் நிராகரிப்பார்கள் என சுயேட்சை எம்.எல்.ஏ.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அருகே சுவாமிமலையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது ஆர்.கே.நகர் பிரச்சினைகளை மட்டும் பேசாமல் கதிராமங்கலம் பிரச்னைகள் குறித்தும், விவசாயிகள் பிரச்னைகள் குறித்தும் பேசுவேன் என தினகரன் தெரிவித்தார்.
மத்திய அரசு தயவோடு தமிழக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டிய டிடிவி தினகரன், இந்த அரசை முடிவுக்கு கொண்டு வர தமிழக மக்கள் தயாராகி விட்டதாக தெரிவித்தார்.