மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளே காரணம் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மும்பையில் ஏற்பட்ட கலவரம் புனே அவுரங்காபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் பரவியது. இதில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில் தலித் மக்களின் பேரணிக்கு இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததாலேயே வன்முறை வெடித்ததாக கூறி மக்களவையில் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்ததால் அவையில் அமளி ஏற்பட்டது. மகாராஷ்டிரா வன்முறை விவகாரத்தில் பிரதமர் வாய்மூடி மவுனியாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.