விழிப்புணர்வூட்டும் விதமாக அமைந்ததையடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது கள்ள ஓட்டுக்களை தடுக்கும் சட்டப்பிரிவு 49P குறித்து முதல்முறையாக விளம்பரம் செய்கிறது தேர்தல் ஆணையம். 49P தொடர்பான பிளக்ஸ்கள் பல இடங்களில் வைக்கப்பட்டு வருகிறது.
அதில், "உங்கள் வாக்கினை வேறு எவரும் பதிவு செய்துவிட்டால் கவலை கொள்ள வேண்டாம். சட்டப்பிரிவு 49P மூலமாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்து வாக்கு சீட்டின் மூலம் வாக்களிக்கலாம். கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், ஒய்வு ஊதிய ஆவணம், MP, MLA, MLC அலுவலக அட்டை, மத்திய மாநில அரசு அடையாள அட்டை, MGNREGA அட்டை, சுகாதார காப்பீட்டு அட்டை, NPR SMART CARD முதலிய ஆவணங்களில் ஏதேனுமொன்றை பயன்படுத்தி உண்மையான வாக்காளர் நீங்கள் என நிரூபணம் செய்து வாக்குச் சீட்டின் மூலம் வாக்களிக்கலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
source ns7.tv