வியாழன், 7 மார்ச், 2019

புகழ்பெற்ற ஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புவிசார் குறியீடு அந்தஸ்து! March 07, 2019

Image
புகழ்பெற்ற ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கி சென்னை மண்டல துணை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
சங்க காலத்தில் இருந்து மஞ்சள் பயிரிடும் பழக்கம், தமிழகத்தில் இருந்து வருவதாலும், சேர, சோழ, பாண்டியர் ஆட்சி காலங்களில் மஞ்சள் வணிகம் நடந்துள்ளதற்கு ஆதாரங்கள் இருப்பதாலும் ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என புவிசார் குறியீடு பதிவுத்துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டது. 
மேலும், மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள், ஈரோடு மாவட்டத்தில் பெருவாரியாக பயிரிடப்படுவதாகவும் அந்த விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இதனை ஏற்றுக் கொண்ட புவிசார் குறியீடு பதிவுத்துறையின் துணை பதிவாளர் சின்னராஜா நாயுடு, ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு அந்தஸ்தை வழங்கி உத்தரவு பிறப்பித்தார். அதற்கான சான்றிதழை ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது.

source ns7.tv

Related Posts: