கோடை வெயில் அதிகரிக்கும் முன்னரே தமிழகத்தில் வெயில் கொளுத்த ஆரம்பித்துள்ளது. நேற்று 8 இடங்களில் வெப்பநிலை 100 பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.
அதிகப்பட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 104.1 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக சேலத்தில் 102.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.
வேலூர் மற்றும் மதுரையில் 102.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும்,
கரூர் மாவட்டம் பரமத்தியில் 102.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக தர்மபுரியில் 101.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், திருச்சியில் 101.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகி உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. உள் தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் எனவும், இன்று மற்றும் நாளை கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அனல் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக காணப்படும் எனவும், அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியசும் பதிவாகலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.