source ns7,tv
நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் மதிமுக முதல் முறையாக ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளது.
எந்தெந்த தேர்தல்களில் அக்கட்சி எத்தனை இடங்களில் போட்டியிட்டது?
➤1996ம் ஆண்டு மார்க்சிஸ்ட் மற்றும் ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்த மதிமுக 24 தொகுதிகளில் போட்டியிட்டது. அப்போது ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
➤1998 ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்த மதிமுக, 5 தொகுதியில் போட்டியிட்டது. 3 இடங்களில் வெற்றி பெற்றது.
➤1999 திமுகவுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்த மதிமுக, 5 தொகுதிகளில் போட்டியிட்டு 4ல் வெற்றி பெற்றது.
➤2004 ம் ஆண்டு திமுக கூட்டணியில் 4 தொகுதியில் போட்டியிட்ட மதிமுக அனைத்திலும் வெற்றி பெற்றது.
➤2009ம் ஆண்டு திமுக கூட்டணியிலிருந்து விலகி அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக ஒன்றில் மட்டும் வெற்றி.
➤2014ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் 7 தொகுதியில் போட்டியிட்ட மதிமுக ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.
➤2019 திமுக கூட்டணியில் ஒரு தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
➤மதிமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் குறைவான தொகுதிகள் போட்டியிடுவது இதுவே முதல் முறை