புதன், 6 மார்ச், 2019

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சிகள் இதுவரை தேர்தலில் சாதித்தது என்ன? March 06, 2019

source ns7.tv
Image
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சிகள் இதுவரை தேர்தலில் சாதித்தவை என்னென்ன?
காங்கிரஸ்:
2004ல் திமுகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதில் 14.4 சதவீத வாக்குகள் காங்கிரஸிற்கு பதிவானது
2009ம் ஆண்டு மீண்டும் திமுகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் 15 தொகுதிகளில் போட்டியிட்டது. 15 சதவீத வாக்குகளுடன் 8 தொகுதிகளில் போட்டியிட்டது 
2014ல் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ், 39 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. அதன் வாக்கு சதவீதம் 4.3 ஆக குறைந்தது 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்:
திமுகவுடன் 2004ம் ஆண்டு கூட்டணி அமைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அக்கட்சிக்கு 2.2 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது 
2009ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்த மார்க்சிஸ்ட் கட்சி, போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் ஒன்றில் வெற்றிபெற்றது. அப்போது 2.2 சதவீத வாக்குகள் அக்கட்சிக்கு கிடைத்தது
  
2014ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்டுடன் கூட்டணி அமைத்த மார்க்சிஸ்ட் 9 தொகுதியில் போட்டியிட்டது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத மார்க்சிஸ்ட் கட்சிக்கு  1 சதவீதத்திற்கும் குறைவாக தான் வாக்குகள் பதிவாகியிருந்தது 
இந்திய கம்யூனிஸ்ட்: 
                                
2004ம் ஆண்டு திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி. கிட்டத்தட்ட 3 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன
2009ல் திமுக கூட்டணியிலிருந்து விலகி அதிமுக கூட்டணியில்  3 போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் 1 தொகுதியில் வெற்றி பெற்றது. அப்போது 2.8 சதவீத வாக்குகள் பதிவானது 
2014ல் 8 தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 1 சதவீதத்திற்கு குறைவான வாக்குகளே பதிவாகின 
மதிமுக: 
2004 ம் ஆண்டு  திமுக கூட்டணியில் 4 தொகுதியில் போட்டியிட்ட மதிமுக அனைத்திலும் வெற்றி பெற்றது. அப்போது 5.9 சதவீத வாக்குகள் பதிவாகின
2009ம் ஆண்டு திமுக கூட்டணியிலிருந்து விலகி அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக ஒன்றில் மட்டுமே வெற்றி. மதிமுகவின் வாக்கு சதவீதம் 3.7 ஆக குறைந்தது. 
2014ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில், 7 தொகுதியில் போட்டியிட்ட மதிமுக ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை 
விடுதலை சிறுத்தைகள் கட்சி: 
2009ம் ஆண்டு திமுக கூட்டணியில் 1 தொகுதியில் போட்டியிட்ட விசிக வெற்றி பெற்றது. அப்போது அக்கட்சி 2.4 சதவீத வாக்குகள் பெற்றது
 
2014ம் ஆண்டு திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட்டது விசிக. ஆனால் ஒன்றில் கூட வெற்றி பெற முடியவில்ல. அதன் வாக்கு சதவீதமும் குறைந்திருந்தது