ஞாயிறு, 10 மார்ச், 2019

விமானப்படை தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டதற்கு கண்டனம்: காங்கிரஸ் தலைவர் ராஜினாமா! March 10, 2019

source: http://ns7.tv/ta/tamil-news/india-important-editors-pick-newsslider/10/3/2019/bihar-congress-leader-quits-over
Image
தீவிரவாத தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக எல்லைகட்டுப்பாட்டு கோடு அருகில் உள்ள பாலகோட் பகுதியில் ஜெய்ஷ்-இ-முஹம்மது இயக்கத்தின் பயிற்சியகத்தில் கடந்த பிப்ரவரி 26ல் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதற்கு நாட்டு மக்களிடையே முழுவதும் பாரட்டைப்பெற்றுத்தந்தாலும், பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் இந்த தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டு வருகிறது. அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் இக்கோரிக்கையை எழுப்பி வருகின்றனர்.
நாட்டின் பாதுகாப்பு குறித்த இந்த விஷயத்தில் பொறுப்பற்றதன்மையுடன் காங்கிரஸ் செயல்பட்டு வருவதாக ஆளும் பாகஜவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பீகார் மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான பினோத் ஷர்மா, துல்லியத் தாக்குதல் குறித்து நம்பகத்தன்மையின்மை எழுப்பி வரும் காங்கிரஸ் தலைமைக்கு கண்டனம் தெரிவித்து கட்சியின் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக ராகுல்காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
குழந்தைத்தனம்:
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பினோத் சர்ஷா, துல்லியத் தாக்குதலின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புவது மிகவும் மோசமான மற்றும் குழந்தைத்தனமான ஒன்று என்றார். காங்கிரஸில் 30 ஆண்டுகாலம் பணியாற்றிய பின்னர் கனத்த இதயத்துடன் கட்சியிலிருந்து ராஜினாமா செய்கிறேன் என கூறினார். ராணுவத்தினரின் நம்பகத்தன்மை குறித்து கட்சி மேலிடம் கேள்வி எழுப்பியதன் வாயிலாக பொதுமக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளதுடன், தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாகவும் உள்ளதாக கூறினார்.
கடந்த ஒரு மாதமாக இந்த விவகாரம் குறித்து ராகுல்காந்தியிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதிய நிலையில் தொடர்ந்து அவர் இந்த போக்கை கைவிட மறுத்ததால் ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஏஜெண்ட்:
கட்சியின் இந்த நடவடிக்கை காரணமாக பாகிஸ்தானின் ஏஜெண்டுகளாக மக்கள் எங்களை பார்க்கின்றனர். காங்கிரஸ்காரன் என கூறப்படுவதில் எனக்கு அசிங்கமாக உள்ளது. கட்சியை விட எனது நாடு பெரியது என்பதால் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்ததாக பினோத் விளக்கம் அளித்து ராகுல்காந்திக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

source: ns7.tv