புதன், 1 ஜனவரி, 2020

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய ஜவாஹிருல்லா மீது வழக்குப்பதிவு...!


Image
மதுரையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய ஜவாஹிருல்லா மற்றும் எம்.பிக்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
நேற்று நடைபெற்ற இந்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மதுரை எம்.பி சு.வெங்கடேசன், ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இதனிடையே ஜவாஹிருல்லா, சு.வெங்கடேசன், நவாஸ்கனி, திருமுருகன் காந்தி உட்பட 37 பேர் மீது விளக்குத்தூண் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதியை குலைத்தல், போக்குவரத்தை தடை செய்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

credit ns7.tv

Related Posts: