ஞாயிறு, 1 மார்ச், 2020

மாதவரம் கொடூர தீ விபத்து சம்பவத்தின் முக்கிய தருணங்கள்!

சென்னை மாதவரத்தில் ரசாயன குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 15 மணி நேரத்தையும் கடந்த கொளுந்து விட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.

மாதவரம் கொடூர தீ விபத்து சம்பவத்தின் முக்கிய தருணங்கள்:
➤ பிற்பகல் 3 மணியளவில் ரசாயன குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

➤ பிற்பகல் 3.30 மணிக்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரத் தொடங்கின.

➤ பிற்பகல் 3.35 மணிக்கு குடோன் இருக்கும் பகுதியில் சாலை மூடப்பட்டு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

➤ மாலை 4 மணிக்கு மளமளவென தீ பரவியதால் குடோனில் இருந்த கெமிக்கல் பேரல்கள், வெடித்து சிதற தொடங்கின. இதனால் குடோனில் கரும்புகை அதிகமாக வெளிவர தொடங்கின.

➤ மாலை 5.30 மணிக்கு சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் மற்றும் தீயணைப்புத் துறை டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

➤ மாலை 6 மணிக்கு தீ கட்டுப்படுத்த முடியாததால் மேலும் 26 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணி தொடங்கியது.

➤ இரவு 8 மணி அளவில் விமான நிலையத்தில் பயன்படுத்தக்கூடிய ஸ்கைலிப்ட் எனப்படும் நவீன தொழில்நுட்ப தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, தீ மேலும் பரவுவதை தடுக்க முயற்சி எடுக்கப்பட்டது.

➤ இரவு 8.30 மணிக்கு மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் தீயணைக்கும் பணிகளை பார்வையிட்டார்..

➤ இரவு 8.45 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த தீயணைப்புத் துறை டிஜிபி சைலேந்திர பாபு, 100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்கும் என்றார்.

➤ இரவு 10 மணிக்கு, தீ அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை - பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.

➤ காலை 6 மணி - 15 மணி நேரத்தை கடந்தும் தீயை அணைக்கும் பணி தொடர்கிறது.
credit ns7.tv