குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் தமிழக அரசைக் கலைப்போம் என கூறிய ஹெச்.ராஜாவை அதிமுக கண்டிக்காதது ஏன் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூர் தனியார் ஹோட்டல் ஒன்றில் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் வைத்தே அவரை கடுமையாக விமர்சித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் வீடியோ பதிவிட்டுள்ளதை கே.எஸ்.அழகிரி கடுமையாகக் கண்டித்தார். இது போன்று அநாகரிகமாக நடந்து கொள்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தமிழக அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தினார்.

தமிழக அரசைக் கலைப்போம் எனக் கூறிய பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவைக் கண்டிக்க அதிமுகவிற்கு அச்சமா எனவும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பினார்.
credit ns7.tv





