வியாழன், 7 மே, 2020

விசாகப்பட்டினம் ரசாயன ஆலை வாயுக்கசிவு: குழந்தை உள்பட 10 பேர் உயிரிழப்பு!

Image
விசாகப்பட்டினத்தில் உள்ள ரசாயன ஆலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட வாயுக் கசிவால் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள எல்.ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன ஆலை ஒன்றில் காலை 3 மணி அளவில் திடீரென ஏற்பட்ட வாயு கசிவால் குழந்தை உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வாயுக் கசிவால் அந்தப் பகுதியில் இருந்த 1000க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்துள்ளனர். மூச்சுவிடுவதில் சிரமம், கண் எரிச்சல், வாந்தி உள்ளிட்ட பாதிப்புகளுடன் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
ரசாயன வாயுக் கசிவால் அந்த ஆலையை சுற்றி இருந்த சுமார் 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட பலரும் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
இந்த வாயுக் கசிவு தொடர்பாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்திப்பதற்காக அவர் விசாகப்பட்டினம் செல்லவிருக்கிறார்.
விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் வாயு கசிவு நடந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கலையும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவிடம் பேசியுள்ளதாகவும், ஆந்திர மாநில அரசுக்கு தேவையான உதவிகளை செய்து தர ஜெகன் மோகன் ரெட்டியிடம் உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவை எதிர்த்து அனைவரும் போராடி வரும் நிலையில், விசாகப்பட்டினம் வாயுக் கசிவு சம்பவம் அம்மாநில மக்களுக்கு மேலும் ஒரு துயரமாக அமைந்துள்ளது.
credit ns7.tv