திங்கள், 18 மே, 2020

அது 20 லட்சம் கோடி இல்லை... வெறும் இவ்வளவு தான்! - ப.சிதம்பரம் ட்வீட்

The fiscal stimulus package is not for Rs 20 lakh crore says P Chidambaram : கொரோனா வைரஸுக்கு பின்னான காலத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த, 20 லட்சம் கோடியில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதனை தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறப்பு பொருளாதார திட்டங்களை வெளியிட்டார்.

பல அரசியல் கட்சி தலைவர்களும், பணம் மக்களிடம் நேரடியாக சென்று சேர வேண்டும். அது தான் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று வலியுறுத்தினர்.  ஆனால், அனைத்தும் வங்கிக் கடன்கள் வகையிலேயே அறிவிக்கப்பட்டன. சிலரோ, ஏற்கனவே மக்களுக்கு செய்திருக்கும் செலவுகளையும் சேர்த்து இந்த சிறப்பு பொருளாதார அறிவிப்பில் வெளியிட்டதாக குற்றம் சுமத்தினார்கள்.

தற்போது, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடிகளுக்கான திட்டங்கள் ஏதும் இல்லை. நிதி அமைச்சர் அறிவித்ததோ வெறும் 1 லட்சத்தி 86 ஆயிரத்து 650 கோடி தான். இந்த எண்ணை எப்போதும் கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை நிலவரம் தெரிந்துவிடும் என்று கூறியுள்ளார்.
பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ 1,86,650 கோடி தான்

ரூ 1,86,650 கோடி மட்டுமே! இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும்
இதைப் பற்றி 663 பேர் பேசுகிறார்கள்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த திட்டங்கள் வெறும் பெரிய பூஜ்ஜியம் என்று விமர்சனம் செய்துள்ளார். அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும் முறையாக செயல்படுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.