திங்கள், 18 மே, 2020

குஜராத்தில் கலவரத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தொழிலாளர்கள்..!

credit ns7
Image
ஊரடங்கு நீடிக்கும் நிலையில் போலீசார் அமைத்திருந்த தடுப்பு வேலியை உடைத்துக்கொண்டு புலம்பெயர் தொழிலாளர்கள் நூற்றுக் கணக்காணோர் உள்ளே நுழைந்ததால் உத்தரபிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்களின் எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. 
மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உத்தரபிரதேச மாநில எல்லையை நடை பயணமாக கடக்க முயன்றனர். அப்போது இருமாநில எல்லைப்பகுதியான சகாட் பகுதியில் அவர்களை தடுக்கும் நோக்கில் தடுப்புகளை காவல்துறையினர் அமைத்திருந்தனர். எனினும், தடுப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு சென்றனர். அவர்களை தடுக்க முடியாமல் காவல்துறையினர் செய்வதறியாமல் திகைத்தனர்.
இதேபோல் குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகே சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் பரவியதால், புலம்பெயர் தொழிலாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், ஆயிரக்கணக்கானோர் குஜராத் மாநிலத்தில் தங்கி பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கால் அங்கு சிக்கித்தவித்து வரும் நிலையில், அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்ல சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அச்சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.