ஞாயிறு, 10 மே, 2020

அதிக ஒலி ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல; ஆராய்ச்சிகள் சொல்வது என்ன?

ஒலியுடன் தொடர்புடைய இதயத்துக்கு ஏற்படும் விளைவுகளுடன் இணைத்து எங்கள் பணியை முன்னெடுக்கவும், எவ்வாறு ஒலி உடல் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நன்கு புரிந்து கொள்ளவும்...

அதிக ஒலியால் நாம் பாதிக்கப்படும்போது கேன்சருடன் தொடர்புடைய டி.என்.ஏ சேதம் அடையும் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.
அதிக ஒலி காதுக்கு நல்லதல்ல என்பது அனைவருக்கும் தெரியும். அதிக ஒலியால் காதுகேட்கும் திறன் பாதிக்கப்படும். நிரந்தரமாக கூட கேட்கும் திறனை இழக்க நேரிடலாம். எனவே முறையான தரமான ஹெட்போன்கள், ஒலி கருவிகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்றும், அதிக ஒலி எழுப்பும் இடங்களில் இருப்பதை தவிர்க்கும்படியும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கடந்த காலங்களில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளில், ஒலியின் பாதிப்பு காரணமாக தீவிரமான உடல் நலக்கோளாறுகள் ஏற்படும் என்பது தெரிய வந்துள்ளது.எலிகளைக் கொண்டு நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளில் மேலும் முடிவான, மேலும் தெளிவான முடிவுகள் தெரிய வந்துள்ளன.
ஆராய்ச்சிகளில், ஒலியின் சத்தம் காரணமாக கேன்சர் தொடர்பான டி.என்.ஏ சேதம் அடையவும், அதிக ரத்த அழுத்தம் ஏற்படவும் காரணமாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. FASEB என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள முதல் ஆய்வில், ஆரோக்கியமான எலிகள், விமானம் ஒலி எழுப்பும் சத்தத்தை நான்கு நாட்களுக்கு கேட்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பின்னர் அந்த எலிகளை சோதித்துப் பார்த்ததில் அவற்றுக்கு அதிக ரத்த அழுத்தம் உருவாகும் வாய்ப்புகள் இருந்தன. பின்னர் வேறு சில எலிகளுக்கு ஆய்வகத்தில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தப்பட்டது. பின்னர் அந்த எலிகள் விமானத்தின் அதிக ஒலியைக் கேட்டதால் அதன் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் ஒரு சினெர்ஜிஸ்டிக் அதிகரித்தது. இதனால் இதயம் மற்றும் நரம்பியல் அமைப்புகளில் வீக்கம் ஏற்பட்டு, அவைகளின் இதயம் மோசமாக பாதிக்கப்படும் நிலையில் இருந்தது.
இரண்டாவது ஆராய்ச்சியில் அதே ஒலி சத்தம் எலிகளில் ஆக்சிஜனேற்ற டி.என்.ஏ சேதத்ததை தூண்டுகிறது. இது மட்டுமின்றி டி.என்.ஏ செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது தெரிந்தது.
ஜெர்மனியின் மானிஷில் உள்ள பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் ஆய்வு ஆராய்ச்சியாளர் மத்தியாஸ் ஓல்ஸ் கூறுகையில், “இந்த புதிய உடல்நலப் பாதிப்புகள் குறித்த கூடுதல் இயக்கவியல் நுண்ணறிவுகளை எங்கள் புதிய தரவுகள் வழங்குகின்றன. உலகளாவிய மரணங்களுக்கு காரணமான, குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், கேன்சர் வளர்வதற்கான சாத்தியங்களை ஏற்படுத்துகின்றன” என்றார்.
இந்த தொடர்புகளை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு, ஆராய்ச்சியாளர்கள், ஒலி சத்தத்தால் உடல் ஆரோக்கியத்தில் நிகழும் விளைவுகள் குறித்து மேலும் இது போன்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். முன் நிறுவப்பட்ட இதய நோய்கள், மற்றும் ஒலியுடன் கூடிய அதன் தொடர்புகள், எலிகளில் ஒலியால் ஏற்படும் நடத்தை விளைவுகள் குறித்தும் ஆய்வு செய்கின்றனர்.
“இந்த புதிய கண்டுபிடிப்புகள், ஒலியுடன் தொடர்புடைய இதயத்துக்கு ஏற்படும் விளைவுகளுடன் இணைத்து எங்கள் பணியை முன்னெடுக்கவும், எவ்வாறு ஒலி உடல் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நன்கு புரிந்து கொள்ளவும் உதவும்,” என்கிறார் ஓல்ஸ். ஒலி காரணமாக ஏற்படும் நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்கவும் இந்த ஆராய்ச்சிகள் உதவும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.