கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த, தமிழகம் வந்திருந்த மத்தியக் குழு, பணியை முடித்துக்கொண்டு, இன்று தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றது.
தமிழகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு, எந்த அளவில் அமுல்படுத்தப்படுகிறது, என்பதை ஆய்வு செய்வதற்காக, மத்திய அரசின் உயர் அதிகாரி திருப்புகழ் தலைமையில், 5 பேர் கொண்ட மத்தியக்குழு, கடந்த 24-ம் தேதி டெல்லியில் இருந்து சென்னை வந்தது. அந்தக் குழு சென்னையில் ஒரு வாரத்திற்கு மேலாக தங்கியிருந்து, நோயின் தாக்கம், ஊரடங்கு அமல்படுத்தப்படுவது பற்றி ஆய்வு நடத்தியது.
மேலும், தமிழக முதலமைச்சர், அரசு உயர் அதிகாரிகளை சந்தித்து மத்திய குழு ஆலோசனைகளையும் நடத்தியது. கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளை பார்வையிட்டு, சிகிச்சை முறைகளையும் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, மத்திய குழு தனது பணிகளை முடித்துக்கொண்டு, இன்று பகல் ஒரு மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து, ஏர் இந்தியா தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றது. இக்குழு தங்கள் அறிக்கையை, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம், ஓரிரு நாட்களில் சமர்பிப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
credit ns7.tv