அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை வரும் ஜுன் 1ம் தேதி முதல் இரு மடங்காகும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனாவின் தாக்கம் உலக நாடுகளை புரட்டிப் போட்டிருந்தாலும், அமெரிக்காதான் அதிக பாதிப்பை சந்தித்து வருகிறது. தற்போது அங்கு கொரோனா பாதிப்பு 12 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில் உயிரிழப்பானது 72 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில், தற்போது நாள்தோறும் 1,750 என்ற நிலையில் உள்ள கொரோனா உயிரிழப்பானது, வரும் ஜுன் 1 முதல் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது.
அதாவது ஜூன் 1 முதல் தினந்தோறும் 3,000 பேர் கொரோனா தொற்றால் உயிரிழக்கக்கூடும் என்றும், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் 25 ஆயிரத்தில் இருந்து 2 லட்சமாக உயரும் என்றும் எச்சரித்துள்ளது.
இதுபோன்ற அறிக்கையின் அடிப்படையில்தான் அமெரிக்காவில் மே மாதத்திற்குள் 70 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பார்கள் என்று அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தற்போது வெளியாகி உள்ள தகவல்கள் அமெரிக்க மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
credit ns7.tv