வெள்ளி, 31 ஜூலை, 2020

அண்ணா சிலை அவமதிப்பு: மனநிலை பாதிக்கப்பட்டவரின் செயலால் பதற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே அண்ணா சிலை அமைந்துள்ள பீடத்தின் மீது காவி துணி போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கருப்பர் கூட்டம் வெளியிட்ட கந்தசஷ்டிகவசம் குறித்த வீடியோ சர்ச்சையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெரியார் சிலை மீது காவிகொடி கட்டுவதும் காவி சாயம் பூசுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது .இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில்...

புதிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயலுகிறது” - கனிமொழி

புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக கனிமொழி ட்வீட்!புதிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயல்வதாக திமுக எம்.பி கனிமொழி குற்றச்சாட்டு வைத்துள்ளார். நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக்கொள்கையை செயல்படுத்தவும், மனிதவள மேம்பாட்டுத்துறையை கல்வி அமைச்சமாக பெயர் மாற்றம் செய்யப்படும் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் பல கல்வியாளர்கள், மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் புதிய கல்விக்கொள்கைக்கு...

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன், பகுதியளவு ஆன்லைன், ஆப்லைன் என மூன்று முறைகளில் பாடங்களை எடுக்கலாம் என அறிவித்துள்ளது.  அதன்படி, நாள் ஒன்றுக்கு 45 நிமிடங்கள் வீதம் தலா 6 வகுப்புகள் மட்டுமே ஆன்லைனில் நடத்தப்பட வேண்டும்...

ஹஜ் பயணம் 2020 எப்படி வேறுபட்டது?

ஹஜ் பயணம் – இஸ்லாமிய நம்பிக்கையில் ஐந்து கடமைகளில் ஒன்று – அது இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை ஹஜ் பயணம் தொடங்கிய பின்னர், சில ஹஜ் பயணிகள் சமூக இடைவெளியைக் கடைபிடித்து காபாவைச் சுற்றி வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த இடத்தை லட்சக் கணக்கானவர்களால் நிரம்பியிருக்கும்.மாறாக, தொற்றுநோய் காரணமாக, கலந்துகொண்ட பக்தர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் கலந்துகொண்டவர்கள் எண்ணிக்கை 25 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது....

பேரறிஞர் அண்ணா சிலையை அவமதித்த

...

மும்மொழிக் கொள்கைக்கு இங்கு இடமில்லை: திமுக மாவட்டச் செயலாளர்கள் தீர்மானம்

திமுக தலைவர் மு.கஸ்டாலின் தலைமையில், நேற்று (ஜூலை 30) காணொலி வாயிலாக நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் – உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:தீர்மானம் 1: கலைஞர் நினைவு நாளை, தக்க வகையில் நெஞ்சில் ஏந்துவோம். கலைஞர் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் வருகின்ற 7.8.2020 அன்று வருவதையொட்டி அந்த மகத்தான தலைவரின் மாபெரும் பணிகளை, அற்புதமான அரிய சாதனைகளை பெருமையுடன் இந்தக்...

வியாழன், 30 ஜூலை, 2020

தேசிய கல்விக் கொள்கை: ஆர்.ஆர்.எஸ் கணக்கு பலித்ததா?

நேற்று, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த தேசிய கல்விக் கொள்கை உருவாக்கும் பணியின் போது மேற்கொள்ளப்பட்ட ஆலோசனை செயல்முறைகளில், ஆர்.எஸ்.எஸ்- ன் குரல் முக்கியத்துவம் பெற்றது.ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இணை நிறுவனங்கள், கல்விக் கொள்கை வரைவு செயல்முறையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டன. ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டாளர்கள், பாஜக ஆளும் சில மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், அரசாங்கத்தின் பிரதிநிதிகள், புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழுத் தலைவர் கே கஸ்தூரிரங்கன் ஆகியோருக்கு...

வனத்துறை விசாரணையில் உயிரிழந்த விவசாயி; மறு உடற்கூறாய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு

வனத்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த தென்காசி விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தென்காசி மாவட்டம், வாகைக்குளத்தைச் சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து. இவர் தனது தோட்டத்தில் மின் வேலி அமைத்துள்ளார். இது தொடர்பாக விசாரிக்க விவசாயி அணைக்கரை முத்துவை வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச்...

ராஜஸ்தான் அரசியல் சூழல் – யாரும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராததன் மர்மம் என்ன?

Manoj C Gராஜஸ்தான் அரசியல் விவகாரம் வேதாளம் – விக்கிரமாதித்தன் கதை போன்று நீண்டுகொண்டே போகிறது. முதல்வர் அசோக் கெலாட், 3வது முறையாக, கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவிடம், வரும் 31ம் தேதி சட்டசபையை கூட்ட அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த ஒரு வாரத்தில் மட்டும் ,முதல்வர் கவர்னரிடம் வைக்கும் 3வது கோரிக்கை இது ஆகும். தற்போதுகூட, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை, ஆனாலும், இந்த அரசியல் விவகாரம்...

இந்தியாவின் ரஃபேல் போர் விமானம்; வேகம் முதல் ஆயுதத்திறன் வரை

இந்தியாவிற்கு வரும் 5 ரஃபேல் போர் விமானங்கள் அம்பாலாவில் புதன்கிழமை காலை தரையிறங்கியது. இந்த ரஃபேல் போர் விமானங்கள் இந்திய கோல்டன் 17 விமான படைப்பிரிவுக்கு புத்துயிர் அளிக்க உள்ளது.இந்த ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படை (ஐ.ஏ.எஃப்) படைப்பிரிவின் வலிமையை 31 ஆக அதிகரிக்கும். 2022 ஆம் ஆண்டில் ஆர்டர் செய்யப்பட்ட அனைத்து 36 ரஃபேல் ஜெட் விமானங்களும் வழங்கப்படும்போது, அது...

ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் பயன்பாட்டிற்கு வருமா ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி?

 Russian vaccine to be ready by August 12 :  ரஷ்யாவில் உருவாகி வரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து மீண்டும் ஒரு முறை தலைப்பு செய்தியாகியுள்ளது. ப்ளூம்பெர்க் வெளியிட்ட செய்தியின் படி ரஷ்யா, கொரோனா வைரஸிற்கு எதிராக தயாரித்திருக்கும் மருந்தை வருகின்ற ஆகஸ்ட் 10-12 தேதிக்குள் பதிவு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Gamaleya Research Institute of Epidemiology and Microbiology என்ற ஆராய்ச்சி நிறுவனம் மாஸ்கோவில் இந்த மருந்தினை தயாரித்து...

வெளிநாட்டு பல்கலைக்கழகம்: புதிய கல்விக் கொள்கை சொல்வது என்ன?

national education policy 2020:  நாட்டின் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி முறையில் பெரும் மாற்றத்திற்கு வழிவகுக்கும், தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு மத்திய அமைச்சரவை  இன்று ஒப்புதல் அளித்தது. இது,  இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தங்கள் வளாகங்களை திறப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியது.சுதந்திர இந்தியாவின் வரலாற்றின் மூன்றாவது கல்விக் கொள்கையான இது, 34 ஆண்டுகள் பழமையான தேசிய கல்விக் கொள்கை, 1986-க்கு மாற்றாக அமைகிறது. இது, வெளிநாட்டு...

15 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கை தூசி தட்டும் அமெரிக்கா: யார் இந்த ரஷீத் சவுத்ரி?

Amitava Chakrabortyகடந்த மாதம் அமெரிக்கா அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார்,  1975 ஆம் ஆண்டில் வங்க தேசத்தின் தந்தை என்று அழைகப்பட்ட அந்நாட்டின் முதல் அதிபரான க்ஷேக் முஜிபுர் ரஹ்மான் கொலை தொடர்பாக 15 ஆண்டுகளாக மூடப்பட்ட வழக்கின் வழக்கு தொடர்பான ஆவணங்களை அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.எம்.ஏ ரஷீத் சவுத்ரி  1996 முதல் அமெரிக்காவில் வசித்து  வருகிறார்....

புதன், 29 ஜூலை, 2020

ப.சிதம்பரம் கேள்வி!

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்ததாக கூறிய பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்தோம் என பிரதமர் பெருமைப்பட்டுக் கொள்வதாக கூறியுள்ள அவர்,  நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு என அறிவித்தது  சரியான முடிவா? என கேள்வி எழுப்பியுள்ளார்.ரயில் இன்றி, பஸ் இன்றி...

டாக்டர் கஃபீல் கான் ஜாமீன் கிடைத்த பிறகும் ஏன் விடுவிக்கப்படவில்லை?

பட மூலாதாரம்,SAMIRATMAJ MISHRA/BBCஉத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 60 குழந்தைகள் இறந்தபோது, அலைந்து திரிந்து குழந்தைகளுக்கு ஆக்சிஜன் ஏற்பாடு செய்து பல உயிர்களைக் காப்பாற்றியவர் என கூறப்பட்ட டாக்டர் கஃபீல் கான் 6 மாதங்களாகச் சிறையில் உள்ளார்.வெறுப்பைத் தூண்டும் விதமாகப் பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவ செய்யப்பட்டுள்ளது.அவருக்கு...