சனி, 18 ஜூலை, 2020

10 ஆயிரம் ஆண்டுகள் பழமைமையான மண்பானை குறியீடுகள் கண்டெடுப்பு!

Image

தூத்துக்குடி மாவட்டம் சிவகளை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட மண்பானை குறியீடுகள் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமைமையானவை என்பது தெரிய வந்துள்ளது.  

தூத்துக்குடி மாவட்டம் சிவகளை கிராமத்தில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கே இதுவரை சுமார் 20 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. தற்போது அந்த இடத்தில் 5 மண்பானை ஓடுகளில் கீறல்கள் மற்றும் குறியீடுகள் கிடைத்துள்ளன. மேலும் இந்தக் குறியீடுகள் சிந்துவெளி வரி வடிவத்தின் நீட்சியாகவும் தமிழ் பிராமி எழுத்துகளின் முன்னோடியாகவும் இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கீழடி அகழாய்வில் கிடைக்கப்பெற்ற வரி வடிவங்கள் 4 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று தெரிய வந்துள்ள நிலையில், தற்போது சிவகளையில் கிடைத்துள்ள வரிவடிவங்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.