ஞாயிறு, 12 ஜூலை, 2020

இடஒதுக்கீடு கொள்கைகளை அமல்படுத்தப்படுவதில் அதிகரிக்கும் அரசியல்

இடஒதுக்கீடு முறை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, கொஞ்சம், கொஞ்சமாக அரிக்கப்படுவதற்கு நீதித்துறையின் உத்தரவுகளும் ஒரு பங்காக இருந்துள்ளது.

கிறிஸ்டோஃப் ஜாஃப்ரலோட், கலையரசன்.ஏ

இந்தியாவின் நேர்மறை பாகுபாட்டில் இட ஒதுக்கீடு முறை மிகவும் பயனுள்ள நுட்பங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த கொள்கையானது, ஒருபோதும் பெரும் அளவுக்கு வேலைவாய்ப்புத் தருவதாக கருதப்படவில்லை. ஆனால்,ஒடுக்குமுறையின் முழு வரலாற்றையும் நிர்வத்தி செய்யும் நல்ல வழியைக் கொண்டதாக இருக்கிறது. இது ஒரு தலித் குழுவை உருவாக்கி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், நடுத்தர வர்க்கத்தின் சில அளவுகோல்களை சீராக உறுதிப்படுத்தியது. 1980-ம் ஆண்டு வரை பொதுத்துறை நிறுவனங்களில் மேல்தட்டு மக்களிடையே ஒதுக்கீடுகள் பூர்த்தி செய்யப்படவில்லை. மத்திய நிர்வாக சேவைகளில், தாழ்த்தப்பட்டோர்(இந்திய மக்கள் தொகையில் 16சதவிகிதமாக இருப்பவர்கள்) 1984-ம் ஆண்டில் சி பிரிவில் 14 சதவிகிதம் பேர் இருந்தனர். 2003-ம் ஆண்டில் பி பிரிவில் 14.3 சதவிகிதம் பேர் இருந்தனர். 2015-ம் ஆண்டில் ஏ பிரிவில் 13.3 சதவிகிதம் பேர் இருந்தனர். மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் அவர்களின் விகிதம் 2004-ம் ஆண்டு 14.6 சதவிகிதத்தில் இருந்து 2014-ம் ஆண்டு 18.1 சதவிகிதமாக அதிகரித்தது. இதற்கு இணையாக, தாழ்த்தப்பட்டோரின்(எஸ்.சி-க்கள்) கல்வி அறிவு விகிதம் 1981-ம் ஆண்டில் 21.38 சதவிகிதமாக இருந்தது 2011ம் ஆண்டில் 66.1 சதவிகிதமாக அதிகரித்தது.

மண்டல் கமிஷன் அறிக்கையை வி.பி.சிங் அமல்படுத்தியபிறகு, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் இட ஒதுக்கீடுகள் காரணமாக பலன் பெற ஆரம்பித்தனர். இதரபிற்படுத்தப்பட்டோராலும் இதே போன்ற வளர்ச்சி அடையப்பட்டது. 2013-ம் ஆண்டு மண்டல் அறிக்கையின்படி இந்திய மக்கள் தொகையில் இதரபிற்படுத்தப்பட்டோர் 52 சதவிகிதம் பேர் இருக்கின்றனர். மத்திய அரசின் பணிகளில் பிரிவு ஏ-யில் 8.37 சதவிகிதம் பேர், பிரிவு பி-யில் 10.01 சதவிகிதம் பேர், பிரிவு சி-யில் 17.98 சதவிகிதம் பேர் இருக்கின்றனர். மத்திய அரசின் பணிகளில் அவர்கள் 2004-ம் ஆண்டு 16.6 சதவிகிதம் பேராக இருந்தனர். இது 2014-ம் ஆண்டு 28.5 சதவிகிதமாக அதிகரித்தது.

கோவிட்-19 தொற்று நிவாரண திட்டத்தின் கீழ் அதனோடு கூடிய கட்டமைப்பு சீர்த்திருத்தங்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்த தனியார் மயமாக்கலின் புதிய திட்டத்தின் காரணமாக இன்றைக்கு இந்த சாதனைகள், பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களின் புதிய கொள்கையின்படி, திறன்வாய்ந்த துறைகள் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், நான்கு பொதுத்துறை நிறுவனங்களுக்கு மேல் உள்ள நிறுவனங்கள் இணைக்கப்படும் அல்லது தனியார் மயமாக்கப்பட உள்ளன. இதர வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கொள்கைகளின்படி இட ஒதுக்கீடுகள் ஏற்கனவே மதிப்பை இழந்து விட்டன.

மேலே குறிப்பிட்ட சதவிகிதம் அதிகரிக்கும். அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் வேலைகளின் எண்ணிக்கையைப் பார்த்தால், பொதுத்துறை நிறுவனங்கள் எண்ணிக்கை சுருங்கி இருப்பதால் அதன் போக்கு என்பது வேறுபட்டிருக்கும். முதலாவதாக காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. 2006-ம் ஆண்டில் 5.5 லட்சமாக இருந்த எண்ணிக்கை 2014-ம் ஆண்டில்(இந்த ஆண்டுக்குப் பின்னர் புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை) 7.5 லட்சமாக இருக்கிறது. மத்திய அரசு வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை இந்தப் போக்கு அதன்பின்னரும் தொடர்ந்தது. உதாரணத்துக்கு 2014-க்கும் 2018-க்கும் இடையே யு.பி.எஸ்.சி-யால் அறிவிக்கப்பட்ட சிவில் சர்வீஸ் விண்ணப்பத்தாரர்கள் எண்ணிக்கை 1236-ல் இருந்து 759-ஆக ஏறக்குறைய 40 சதவிகிதம் அளவுக்குக் குறைந்திருக்கிறது. இரண்டாவதாக 2003-ம் ஆண்டுக்கும் 2012-ம் ஆண்டு காலகட்டத்துக்கும் இடையே மத்திய‍ அரசின் பணிகளில் ஊழியர்கள் எண்ணிக்கை என்பது 32.69 லட்சத்தில் இருந்து 26.30 லட்சமாக குறைந்து விட்டது. இட ஒதுக்கீடுகளால் பயன்பெறும் தலித்களின் எண்ணிக்கை 5.4 லட்சத்தில் இருந்து 4.55 லட்சமாக 16 சதவிகிதமாக குறைந்து விட்டது. மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை சதவிகிதம் அதிகரிப்பதற்கு பதில், 2011-ம் ஆண்டு 18.1 லட்சமாக இருந்தது. இது 2014-ம் ஆண்டு 14.86 சதவிகிதமாக குறைந்தது. இதற்கு முரண்பாடாக, இதர பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் பணிகளில் 2003-ம் ஆண்டு மற்றும் 2012-ம் ஆண்டுக்கும் இடையே 1.38 லட்சத்தில் இருந்து 4.55 லட்சமாக உயர்ந்திருக்கிறது. ஆனால், மத்திய பொதுத்துறை நிறுவனங்களைப் பொறுத்தவரை, தலைகீழ் யு வளைவு தொடங்கியது. இட ஒதுக்கீட்டால் பயன்பெறும் இதர பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 2008-ம் ஆண்டு 14.89 லட்சத்தில் இருந்து 2012-ல் 23.55 லட்சமாக அதிகரித்தது. இந்த ஆண்டுக்குப் பின்னர் 23.38 லட்சமாக குறைந்து விட்டது. மத்திய அரசு பணிகளில் புறவழியில் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டதன் காரணமாக இட ஒதுக்கீடு முறைக்கு பங்கம் ஏற்பட்டது. 2014-ம் ஆண்டு முதல் ஆட்சியின் காலகட்டத்தின் இறுதியில் நரேந்திரமோடி தாம் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினார். இந்திய நிர்வாகத்தில் பின்வாசல் வழியே அதிகாரிகள் நியமிப்பதற்கான முயற்சி உருவாக்கப்படும் என்று பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தொழில்துறை, கல்வித்துறை, சமூகம் ஆகியவற்றில் உள்ள நிபுணர்களை மத்திய அரசு பணிகளுக்கு இழுப்பதுதான் இந்த சீரமைப்பின் நோக்கமாக கூறப்பட்டது. 2019-ம் ஆண்டு பிப்ரவரியில், 10 இணை செயலாளர் பதவிகளை நிரப்ப 89 விண்ணப்பதாரர்கள்(தனியார் நிறுவனங்களில் இருந்து வந்த 6000 விண்ணப்பங்களில் இருந்து) பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படாததால், இந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இருந்தது. இட ஒதுக்கீடு முறை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, கொஞ்சம், கொஞ்சமாக அரிக்கப்படுவதற்கு நீதித்துறையின் உத்தரவுகளும் ஒரு பங்காக இருந்துள்ளது.

பல்கலைக்கழக மானிய குழுவானது, 2018-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், ஒட்டு மொத்தமாக பல்கலைக்கழக மட்டத்திலான நியமனங்களில் இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் பிரிவை துறை ரீதியாக மாற்றிக்கொள்ளும் அனுமதிக்கு ஆதரவாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த மாற்றம் காரணமாக, இட ஒதுக்கீடுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் அளவு குறைக்கப்பட்டது மற்றும் சிறிய துறைகள் காரணமாக கீழ் சாதியினர் இந்த பதவிகளுக்கு நுழைவதை தடுத்தது. சிறிய துறைகள் என்பதால், காலியிடங்களும் குறைவு, இட ஒதுக்கீட்டில் பிரிக்கப்படாத தால், எந்த ஒரு இடமும் ஒதுக்கப்படவில்லை. இதன் விளைவாக, சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தலுக்கான அமைச்சகத்தின் அறிவிப்பின்படி 11 மத்திய பல்கலைக்கழகங்களுக்கான ஆசிரியர் பணிகளுக்கு 2.5 சதவிகித இடங்கள் மட்டுமே எஸ்.சி-களுக்காக ஒதுக்கப்பட்டது. எஸ்.டி-களுக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்பட வில்லை. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 8 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டன. எனினும், அவசரசட்டத்தின் விளைவின் தொடர்ச்சியாக 2019-ம் ஆண்டு மார்ச் மற்றும் ஜூலை மாதங்களில் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாற்றியமைக்கப்பட்டதை இனிமேலும் காணப்போவதில்லை.

அண்மையில், உச்ச நீதிமன்றம், பிப்ரவரி 7-ம் தேதி இன்னொரு முக்கியமான முடிவை எடுத்தது. பதிவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு கோருவது அடிப்படை உரிமை இல்லை என்று உத்தரவிட்டிருக்கிறது. 1992-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பதவி உயர்வுகளில் எஸ்.சி.,எஸ்.டி-களுக்கு அனுமதி அளிக்கும் முடிவின் விளைவாக பிரிவு 16(4 ஏ) என்ற ஒரு அம்சத்தை மீறிய விதியாக 1995-ம் ஆண்டு நரசிம்மராவ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசியல் சட்டத்திருத்ததின் விளைவுக்கு இந்த தீர்ப்பு குறைவு ஏற்படுத்துகிறது. மேலும் இதில் ஆச்சர்யம் என்னவென்றால், ஏ.பி.வாஜ்பாய் ஆட்சியில் 2001-ம் ஆண்டில் இந்த சட்டத்திருத்தம் மேலும் மேம்படுத்தப்பட்டது. எஸ்.சி.,எஸ்.டி-க்களுக்கு பணிமூப்புடன் கூடிய பதவி உயர்வுக்கும் வகை செய்யும் வகையில் 85 வது சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 2020-ம் ஆண்டில் இ ந்த நேரத்தில், இந்த சட்டத்திருத்த த்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் முடிவு செய்ததை எதிர்த்து முறையிடுவதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

இட ஒதுக்கீடு குறித்த அண்மைகால கேள்விக்கு கூட அரசு பதில் அளிக்குமா இல்லையா என்று பார்க்க வேண்டும். கடந்த மாதம், சுகாதாரத்துறையில் மண்டல் கமிஷனின் அடிப்படையிலான 27 சதவிகித இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய கமிஷன் அந்த துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது. உண்மையில் 2017-ம் ஆண்டில் இருந்து, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் கீழ், மாநில கல்லூரிகளில் உள்ள அனைத்து இந்திய இடங்கள் ஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 27சதவிகித ஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை. இதனால், கடந்த மூன்று ஆண்டுகளில் 10,000-ம் இடங்கள் பறிபோயின. இந்த இடங்கள் பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டன.

இட ஒதுக்கீடு முறை குறைக்கப்பட்டதால் மட்டும் எஸ்.சி-க்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தண்டிக்கப்படவில்லை. இதர கொள்கைகள் காரணமாகவும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக மோடியின் முதலாவது ஆட்சி காலத்தில் தலித்களின் கல்விக்காக இந்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை குறைக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில், சிறப்பு கூறு திட்டத்தில்(ஆண்டு பட்ஜெட்டில் ஒரு உபப்பிரிவு ), தலித்களின் மக்கள் தொகை வலுவுக்கு ஏற்ப 16.1 சதவிகிதமாக இருக்க வேண்டும். இது மோடியின் முதலாவது ஆண்டு ஆட்சிகாலத்தில் 9 சதவிகிதம், 6.5 சதவிகிதம் என ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இதன் விளைவாக கல்விஉதவித்தொகை கடுமையாக குறைக்கப்பட்டது. கல்வி உதவித்தொகை குறைக்கப்பட்டது மற்றும் கல்வி உதவித்தொகை தருவதற்கு தாமத ம் ஆனதன் விளைவாக 50 லட்சம் தலித் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர் என்று எஸ்.கே.தோரட் கூறுகிறார்.

இந்தியாவின் நேர்மறையான பாகுபாட்டின் பாதையில் தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இந்த கொள்கை அமல்படுத்தப்படுவதில் அரசியல் செல்வாக்கின் செயல்பாட்டின் போக்குத் தெரிகிறது. பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அரசாங்கங்களில் இருக்கும் போது குறிப்பாக ஆளும் கட்சிகளில் அங்கம் வகிக்கும் அரசுகளிடம் அழுத்தம் கொடுத்து அவர்கள் அதனைப் பெற்றனர். ஆச்சர்யப்படத்தக்க வகையில் இந்த கட்சிகளின் தேர்தல் வெற்றியில் ஏற்பட்ட சரிவு, மேல் தட்டு வர்கத்தினர் சட்டப்பேரவைகளுக்கு திரும்பி வந்தது மட்டுமின்றி, பொது மக்களுக்கு ஆதரவாக அரசின் கொள்கைகளை கேள்விக்கு உட்படுத்துவதும் குறைந்து விட்டது.

இந்த கட்டுரை முதலில் கடந்த 8-ம் தேதியிட்ட நாளிதழில் “Social injustice” என்ற தலைப்பில் வெளியானது. கட்டுரையாளர் கிறிஸ்டோஃப் ஜாஃப்ரலோட் பாரீசில் உள்ள சிஇஆர்ஐ-அறிவியல் பிஓ/சிஎன்ஆர்எஸ் என்ற அமைப்பில் மூத்த ஆராய்ச்சியாளர் மற்றும் லண்டனில் உள்ள கிங்க்ஸ் இந்தியா நிறுவனத்தில் இந்திய அரசியல் மற்றும் சமூகவியல் பேராசிரியராகவும் இருக்கிறார். இன்னொரு கட்டுரையாளரான கலையரசன், அமெரிக்காவில் உள்ள ப்ரவுன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மற்றும் பொதுவிவகாரங்களுக்கான வாட்சன் மையத்தில் ஒரு ஃபுல்பிரைட் அறிஞராக இருக்கிறார்.