பாரத் பயோடெக் கோவாக்சின் (COVAXIN) மற்றும் ஜைடஸ் கேடிலாவின் சைகோவி-டி (ZyCov-D) போன்ற கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகள் இந்த வாரத்தில் மனிதர்களிடத்தில் சோதிக்கப்பட இருக்கிறது.
கொரோனவுக்கு எதிரான இந்த தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றன?
பாரத் பயோடெக் நிறுவனம் செயலிழக்கப்பட்ட ரேபீஸ் கிருமி அடிப்படையில் கோவிட்-19 தடுப்பு மருந்ததான கோவாக்சின் தடுப்பூசி மருந்தை தயாரித்தது.
வெப்பம் அல்லது ஃபார்மால்டிஹைட் ( ‘கொல்லப்பட்டத’) மூலம் முழு வைரசையும் செயலிழக்கச் செய்யலாம், ஆனாலும் ஆன்டிஜென் மூலக்கூறு கட்டமைப்புகளை அப்படியே வைத்திருக்க முடியும். செயலற்ற வைரஸ் நோயால் பாதிக்கவோ அல்லது நோயை ஏற்படுத்தவோ முடியாது.
கொல்லப்பட்ட SARS-CoV-2 இன் துகள்களின் குறிப்பிட்ட அளவுகளை செலுத்துவதன் மூலம் இறந்த வைரஸுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்க உடலுக்கு உதவுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.
சைகோவி-டி (ZyCoV-D): சைகோவி-டி (ZyCoV-D) எனப்படும் இந்த பிளாஸ்மிட் டிஎன்ஏ தடுப்பு மருந்து சைடஸ் என்ற நிறுவனத்தால் வடிவமைத்து, தயாரிக்கப்பட்டது.
DNA பிளாஸ்மிட் தடுப்பூசி : கொரோனா வைரஸ் அதன் ஸ்பைக் புரதங்களின் உதவியுடன் மனித உயிரணுக்களை பாதிக்கிறது. ஸ்பைக் புரதத்தின் மரபணுக் குறியீடு பாதிப்பில்லாத டி.என்.ஏ பிளாஸ்மிட்டாக பிரிக்கப்படுகிறது. வைரஸ் ஸ்பைக் புரதத்தின் மரபணுக் குறியீட்டைக் கொண்ட இந்த மாற்றியமைக்கப்பட்ட பிளாஸ்மிட் டி.என்.ஏ பெருந்திரளான அணுக்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது (host cells). செல்லுலார் இயந்திரங்கள் டி.என்.ஏவை பரிமாற்றம் செய்து மரபணுவில் குறியிடப்பட்ட வைரஸ் புரதத்தை உருவாக்குகின்றன. மனித நோயெதிர்ப்பு மண்டலம் அந்நிய புரதத்தை அங்கீகரிப்பதுடன், பொருந்தக்கூடிய ஆன்டிபாடியை உருவாக்குகிறது.
இந்தத் தடுப்பூசிக்குப் பிறகு, எந்த நேரத்தில், புதிய கொரோனா வைரஸ் நாம் பாதிக்கப்பட்டாலும், ஸ்பைக் புரதத்தை உணர்ந்தவுடன், நமது நோயெதிர்ப்பு மண்டலத்தால் உடனடியாக ஆண்டிஜென் வெளியிடப்படுகிறது. நோயெதிர்ப்புக் கொலையாளி செல்கள் செயலிழந்த வைரஸ்களைக் கைப்பற்றுகின்றன. தொற்று ஏற்படுவதற்கு முன்பே தொற்று பரவாமல் தடுக்கப்படுகிறது .
மருத்துவப் பரிசோதனை கட்டம்:
பாரத் பயோடெக் மற்றும் ஜைடஸ் கேடிலா ஆகிய இரண்டு நிருவனங்கங்களும் ஜூலை 15 ஆம் தேதி முதல் மனிதர்களுக்கு தடுப்பூசி மருந்தை செலுத்தி வருகின்றனர் .
கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனைகளின் முதல் கட்டம் நாட்டின் 12 மருத்துவ சோதனை தளங்களில் 375 பேரிடம் நடத்தப்பட உள்ளது. எய்ம்ஸ் பாட்னா, பிஜிஐஎம்எஸ், சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம், ரோஹ்தக் ஆகிய இரண்டு மருத்துவமனைகள் ஏற்கனவே தடுப்பூசி செயல்முறையைத் தொடங்கியுள்ளன.
ஜைடஸ் கேடிலா நிறுவனம் தனது பிளாஸ்மிட் டிஎன்ஏ தடுப்பு மருந்து 1,048 மனிதர்களுக்குச் செலுத்தி மருத்துவப் பரிசோதனைகளின் முதலாவது, இரண்டாவது கட்டப் பரிசோதனைகள் மேற்கொள்ள இருக்கின்றன. அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் ஆராய்ச்சி மையத்தில் இந்த மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன.
பிறகு என்ன நடக்கும் ?
கோவாக்சின் பரிசோதனையைத் தொடங்கிய தளங்கள்,முதலில் இந்த தடுப்பூசியை முதற்கட்ட சோதனைக்கு அனுப்புவது பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
உதாரணமாக, பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல் தொகுப்பில் மொத்தம் 18-20 பேருக்கு மட்டும் தடுப்பூசிகள் கொடுக்கப்படும். தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு இதை தாங்குகின்ற தன்மை; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை ஆகியவற்றை குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டு, தரவு மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பு வாரியத்திடம் சமர்பிக்கப்படும். மனிதர்களில் தடுப்பூசியை நிர்வகிப்பது பாதுகாப்பானதா? என்பதை வாரியம் தீர்மானிக்கும்.
இதில், சிக்கல்கள் எதுவும் காணப்படவில்லை எனில், முதலாவது கட்ட மருத்துவப் பரிசோதனையை விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
சைகோவி-டி தடுப்பு மருந்துக்கு இதேபோன்ற நடைமுறை பின்பற்றப்படுமா என்பது தெளிவாக இல்லை.
கோவாக்சின் தடுப்பூசியின் முதல் கட்ட பரிசோதனையில் பங்கேற்கும் மனிதர்களுக்கு, பதினான்கு நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தடுப்பூசி போடப்படும்.
சைகோவி-டி பரிசோதனையில் பங்கேற்கும் மனிதர்களுக்கு முறை தடுப்பு மருந்துகள் செலுத்தப்படுகின்றன. இரண்டாவது தடுப்பு மருந்து 28 வது நாளிலும், மூன்றாவது மருந்து 56 வது நாளிலும் கொடுக்கப்படுகிறது.
சோதனைகள் எவ்வளவு காலம் எடுக்கும்?
கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையின் முதல் கட்டம் முடிவடைய ஒரு மாதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, முதல் சோதனையின் தகவல்கள் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அலுவலருக்கு (டிரக் கண்ட்ரோலர் ஜெனரல் ஆஃப் இந்தியா) சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, இது இரண்டாம் கட்ட சோதனைகளுக்கு நகரும். இரண்டு கட்டங்களும் முடிவடைய 15 மாதங்கள் வரை ஆகலாம் என்று CTRI தெரிவிக்கிறது.
சைகோவி-டி (ZyCoV-D) தடுப்பு மருந்தின் முதல் கட்ட சோதனைகள் முடிவடைய கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து தடுப்பூசி இரண்டாம் கட்டத்திற்கு நகரும். இரண்டு கட்ட மருத்துவ பரிசோதனைகளும் முடிவடைய ஒரு வருடம் ஆகும் என்று CTRI தெரிவிக்கிறது.
இருப்பினும், ஜைடஸ் கேடிலாவின் தலைவர் பங்கஜ் படேல், இரண்டு கட்ட மருத்துவ பரிசோதனைகளும் மூன்று மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாக முன்னர் கூறியிருந்தார்.