24 மாவட்டங்களில் 386 கிராம பஞ்சாயத்துகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், 20 கிராம பஞ்சாயத்துகளில், தலித் தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்கப்படவில்லை எனவும், 22 பஞ்சாயத்துகளில் நாற்காலியில் உட்கார அனுமதிக்கப்படவில்லை எனவும் 42 பஞ்சாயத்துகளில் பெயர்ப் பலகை வைக்க அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (TNUEF) கடந்த வியாழக்கிழமை அறிக்கையை ஒன்றை வெளியிட்டது. அதில், கிராம பஞ்சாயத்துகளின் தலித் தலைவர்களுக்கு எதிரான நிலையை எடுத்துக்காட்டு, அவர்களின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசை வலியுறுத்தி இருந்தது.
இந்த கணக்கெடுப்பு, 24 மாவட்டங்களில் 386 கிராம பஞ்சாயத்துகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், 20 கிராம பஞ்சாயத்துகளில், தலித் தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்கப்படவில்லை எனவும், 22 பஞ்சாயத்துகளில் நாற்காலியில் உட்கார அனுமதிக்கப்படவில்லை எனவும் 42 பஞ்சாயத்துகளில் பெயர்ப் பலகை வைக்க அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. மேலும், 17 பஞ்சாயத்துகளில் பெண் தலித் தலைவர்கள் பாலின பாகுபாட்டை எதிர்கொள்வதாகவும் அந்த கணக்கெடுப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக தலித் தலைவர்கள் எதிர்கொண்ட தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், அவமரியாதை உள்ளிட்ட முழுமையான அறிக்கையைத் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், தலைவர் செல்லக்கண்ணு ஆகியோர் வெளியிட, முன்னாள் எம்.எல்.ஏ மகேந்திரன் பெற்றுக்கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சாமுவேல்ராஜ், இந்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும், ஆகஸ்ட் 15-ஆம் தேதி அனைத்து தலித் தலைவர்களும் தேசியக் கொடி ஏற்றுவதை உறுதி செய்ய மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அண்மைச் செய்தி: ‘“வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் 2வது பாடல் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது!’
கள்ளக்குறிச்சியில் உள்ள எடுத்தவைநத்தம் கிராமத்தில் மூவர்ணக் கொடியை ஏற்ற விடாமல் தடுத்த ஊராட்சி மன்றத் தலைவர் சுதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு கோரிய அவர், மக்கள் நீதி மய்யம் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் ஒரு தனி அறிக்கையில், இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியதுடன், பள்ளியிலோ அல்லது மாற்று இடத்திலோ சுதா கொடி ஏற்றுவதை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக நீதிக்கு எதிராகச் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கையை முன்வைத்துப் பேசினார்.
source https://news7tamil.live/report-highlights-caste-bias-against-dalit-panchayat-presidents.html