முஸ்லிம் பள்ளி மாணவியை கிண்டல் செய்த ஜாட் பொறுக்கிகள், தட்டிக்கேட்ட குடும்ப உறுப்பினர்கள் மீது துப்பாகியால் சுட்டதில் 3 பேர்கள் பலி, 17 பேர்கள் காயம்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பேடா என்ற கிராமம், நேற்று(17\9\16) ஒரு முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை உடன் பிறந்த சகோதரன் பள்ளிக்கு அழைத்து செல்லும்போது ஜாட் இனத்தை சேர்ந்த 6 பொறுக்கிகள் அந்த மாணவியை கிண்டல் செய்தனர், இதை தட்டிக்கேட்ட மாணவியின் சகோதரனுக்கும் அந்த கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, வழியில் சென்றவர்கள் விலக்கிவிட்டனர்.
மாணவியை பள்ளியில் விட்டு வீடு திரும்பும்போது மாணவியின் தாய்மாமா விடம் அந்த கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, மாணவியின் சகோதரன் விலக்கிவிட முயற்சி செய்யும்போது, சகோதரன் மற்றும் தாய்மாமா இருவரையும் கடுமையாக தாக்கினர், சிலர் அவர்களை காப்பாற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
மாணவியை கிண்டல் செய்தவன் உங்களை சும்மா விடபோவதில்லை என கூறி சென்றான். இதனால் மாணவியின் குடும்பம் காவல்துறையில் புகார் தெரிவித்தது, அவர்களது வீட்டிற்கு இரண்டு காவலர்கள் பாதுகாப்புக்கு அனுப்பட்டனர்.
இருவரும் வீடு சென்ற சிறிது நேரத்தில் மாணவியை கிண்டல் செய்தவன் 20க்கும் மேற்பட்டோர்கள் துப்பாக்கியுடன் மாணவியின் வீட்டில் நுழைந்து அணைத்து ஆண்களையும் துப்பாக்கியால் சுட்டனர், இதில் அக்குடும்பத்தின் ஆண்கள் 6 பேர்கள் மீது குண்டு பாய்ந்தது, சம்பவ இடத்திலேயே 3 பேர்கள் பலியாகினர்.
மேலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த கும்பல் அனைவரையும் கற்பழித்து கொன்றுவிடுவோம் என மிரட்டி சென்றனர்.
காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது, பாதிகப்பட்ட குடும்பதை சேர்ந்த 17 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர், இதைப்பற்றி அக்குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் DNA பத்திரிகைக்கு கூறும்போது, எங்களுக்கு உதவ யாருமேயில்லை, நாங்கள் அவர்கள் முன் சக்தி அற்றவர்கள், அதற்காக நாங்கள் நீதி கேட்டு போராடாமல் இருக்க மாட்டோம்.
எங்கள் குடும்ப உறுப்பினர்களை சுட்டுக்கொன்ற கும்பலையும், அதை வேடிக்கை பார்த்த இரு காவல்துறை அதிகாரிகளையும் தண்டிக்கவேண்டும் என கூறினார்.
ஜாட் இனத்தை சேர்ந்த 6 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், 15 க்கும் மேற்பட்டவர்களை தேடி வருகிறது காவல்துறை.