திங்கள், 3 ஏப்ரல், 2017

விவசாயிகளுக்காக ஆர்பரிக்கும் தமிழர்கள்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அறவே நிறுத்த கோரி தடையை மீறி பேரணி
இன்று 01-04-2017 திருவாரூரில் காலை 10 மணியளவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அறவே நிறுத்த கோரி
திருவாரூர் மாவட்டத்தின் நீர்நில அமைப்பு மற்றும் வணிகர் அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி தராததால் தடையை மீறி நடைப்பெற்ற கோரிக்கை பேரணி மற்றும் ஆர்பாட்டத்தில் மமக பொதுச்செயலாளர் அண்ணன் அப்துல் சமது அவர்கள் கலந்து கொண்டு கன்டண உரையாற்றி கைதானார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மமக மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுசா,தமுமுக மாவட்ட செயலாளர் பாஜூல் ஹக் மமக மாவட்ட செயலாளர் தீன் மற்றும் நிறுவாகிகள் தொண்டர்களும் இதர கட்சி தொண்டர்களும் பெருமளவில் கலந்துக்கொண்டு கைதாயினர்.
தமுமுக - மமக
ஊடக பிரிவு
திருவாரூர் மாவட்டம்