
சேலம் மத்திய சிறையில் இரண்டு கைதிகள் திடீரென மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறைக் கைதிகள் கஞ்சா வைத்திருப்பதாக வெளியான தகவலை அடுத்து சிறை அதிகாரிகள் ஸ்டீபன் ராஜ், பிரகாஷ் என்கிற இரண்டு கைதிகளின் ஆடையை கலைந்து சோதனை நடத்தியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருவரும் மரத்தின் மீது ஏறி, உடலில் பிளேடால் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தனர். இதனைத் தொடர்ந்து சிறைத்துறை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கைதிகள் இருவரும் மரத்தில் இருந்து கீழிறங்கி வந்தனர்.