புதன், 15 நவம்பர், 2017

புதுச்சேரியில் இருந்த வியாதி தமிழகத்திற்கும் தொற்றிவிட்டது” - நாரயணசாமி November 15, 2017

அரசு அதிகாரிகளை அழைத்து கூட்டம் போடுவதற்கு ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் பரவிய ஆய்வுக் கூட்டங்கள் வியாதி, இப்போது தமிழகத்தையும் தொற்றி இருப்பதாக விமர்சனம் செய்தார். மேலும் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை முடக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முயல்வதாக குற்றன் சாட்டினார். மேலும் இதற்காக மாநில ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களை வைத்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற வேலைகளை செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். எனவே இதுபோன்ற நடவடிக்கைகள் கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும் என்றும் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார். 

Image

Related Posts: