ஏவுகணைகளை தயாரிப்பதற்காக இஸ்ரேலுடன் போடப்பட்ட 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை இந்தியா அரசு ரத்து செய்துள்ளது.
இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி நிறுவனமான DRDOவிலேயே ஏவுகணைகளை தயாரிக்க திட்டமிட்டிருப்பதால் இஸ்ரேலுடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் உலகத்தரம் வாய்ந்த ஆயுதங்கள் அனைத்தும் DRDOவிலேயே தயாரிக்கப்படும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக ஏவுகணைகளை தயாரிப்பதற்காக அமெரிக்காவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தையும் இதே காரணத்தை சுட்டிக்காட்டி இந்திய அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது