சனி, 2 நவம்பர், 2019

அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயாக ரூ.95,380 கோடி வசூலாகியுள்ளது.

credit ns7.tv
சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி வருவாய் குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி மத்திய ஜிஎஸ்டியாக ரூ.17,582 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.23,674 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.45,517 கோடியும் (இறக்குமதி மூலம் ரூ.21,446 கோடி), செஸ் வாயிலாக 7,607 கோடியும் (இறக்குமதி மூலம் ரூ.774 கோடி) வசூலாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பரில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.91,916 கோடியாக இருந்த நிலையில் தற்போது அந்த அளவு அதிகரித்துள்ளது. கடந்த மாதம் கிடைத்திருந்த வருவாயானது 19 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைவான வரிவசூலாகும்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தைவிட இந்தாண்டு அக்டோபரில் 5.29% அளவிற்கு ஜி.எஸ்.டி வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு அக்டோபரில் ஒரு லட்சத்து 710 கோடி ரூபாய் வசூலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது