செவ்வாய், 2 ஜனவரி, 2018

2017 விமான வரலாற்றில் விபத்து இல்லாத பாதுகாப்பான ஆண்டு: ஆய்வில் தகவல்



ஆம்ஸ்டர்டம்: பயணிகள் விமான விபத்து இல்லாத பாதுகாப்பான ஆண்டாக 2017-ம் ஆண்டு பதிவிடப்பட்டுள்ளது. டச்சு நாட்டு விமானப் போக்குவரத்து ஆலோசனை நிறுவனமான டூ 70யும் ஏவியேஷன் சேஃப்டி நெட்வொர்க் என்ற இணையதள ஆய்வு நிறுவனமும் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டன. டூ 70 ஆய்வில் கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் 1 கோடியே 60 லட்சம் பயணிகள் விமான சேவையில் ஒரு விமானம் மட்டுமே விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏவியேஷன் சேஃப்டி நெட்வொர்க் ஆய்வில் கடந்த ஆண்டில் பயணிகள் விமான விபத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சரக்கு விமானம் உள்ளிட்ட மற்ற வகை விமான விபத்துகளில் அந்த விமானங்களில் பயணித்த 44 பேரும் விமானம் தரையில் விழுந்தபோது நிலத்தில் இருந்த 35 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts: