2 jan 2018 புனே: புனேவில் தலித்துகள் போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்ததால் மராட்டியத்தில் பதற்றம் நிலவி வருகிறது. மோதலில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு மராட்டிய அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. தலித் போராட்டத்தை அடுத்து புனே நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் நாளை பந்த்
மராட்டிய மாநிலத்தில் நாளை முழு அடைப்பு நடத்த தலித் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளனர். புனேயில் தலித் இளைஞர் கொல்லப்பட்டதற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளது. புனேயில் நடந்த போராட்டம் மும்பை, அவுரங்காபாத்துக்கும் பரவியதால் பதற்றம் நீடிக்கிறது.
நீதி விசாரணைக்கு உத்தரவு
புனேயில் நடந்த கலவரம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
வாகனங்கள் தீ வைப்பு
தலித்துகள் மீதான தாக்குதலைத் கண்டித்து புனே மற்றும் மும்பையில் 40 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. புனேயில் தேசிய நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறுகிறது.
பள்ளிகள் மூடல்
மும்பை நகரில் பதற்றம் நிரவி வருவதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மின்சார ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தின் பின்னணி
புனேயில் 200 ஆண்டுகளுக்கு முன்பு மஹர் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். உயர் ஜாதியினரின் ஆதிக்கத்தை கண்டித்து பிரிட்டிஷ் படையுடன் சேர்ந்து போரிட்டனர்.
200-வது ஆண்டு வெற்றி தினம்
புனேயில் உயர் ஜாதியினருக்கு எதிரான போராட்டத்தின் 200-வது ஆண்டு வெற்றி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது வெற்றி தினம் கொண்டாடிய தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
source: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=364099