தாய்ப்பால் வழங்குவதை அரசு ஏன் கட்டாயமாக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள சித்துராஜபுரம் ஆரம்ப சுகாதார மையத்தில் ஐஸ்வர்யா என்பவர் பயிற்சி மருத்துவராக பணியாற்றியபோது 6 மாதம் பேறுகால விடுப்பு எடுத்திருக்கிறார்.
இதையடுத்து, மருத்துவ மேற்படிப்பில் சேர ஐஸ்வர்யாவுக்கு இடம் கிடைத்தபோது அவர் 2 ஆண்டுகள் பணியை நிறைவு செய்யவில்லை எனக் கூறி சிவகாசி சுகாதார சேவை துணை இயக்குநர் அவரை பணியில் இருந்து விடுவிக்க மறுத்துள்ளார்.
இதனை எதிர்த்து ஐஸ்வர்யா தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். பேறுகால விடுப்பை பணிக்காலத்திற்கான கணக்கில் எடுத்துக்கொள்ளாததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, அடுத்த ஆண்டு ஐஸ்வர்யாவை நேரடியாக மேற்படிப்பில் சேர்த்துக்கொள்ள உத்தரவிட்டார்.
மேலும், "6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் வழங்குவதை அரசு ஏன் கட்டாயமாக்கக் கூடாது" என சரமாரியாக கேள்விகளை எழுப்பிய நீதிபதி கிருபாகரன், இது தொடர்பாக வரும் 22-ஆம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.