புதன், 3 ஜனவரி, 2018

புனே கலவரம்: ராகுல்காந்தி, மாயாவதி கடும் கண்டனம் January 3, 2018

மகாராஷ்டிராவில் தலித்துகள் மீதான தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, தலித்துகள் இந்திய சமூகத்தில் கீழ்நிலையில் இருக்க வேண்டும் என்பது பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் எண்ணம் என விமர்சித்துள்ளார். உனா, ரோகித் வெமுலா, இப்போது பீமா கோரேகான் போன்றவை ஒடுக்குமுறைக்கு எதிரான சின்னங்கள் எனவும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.
A central pillar of the RSS/BJP’s fascist vision for India is that Dalits should remain at the bottom of Indian society. Una, Rohith Vemula and now Bhima-Koregaon are potent symbols of the resistance.
இதனிடையே, புனே வன்முறைக்கு தலித் உயிரிழந்த சம்பவத்திற்கு, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த வன்முறைக்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்பினரே காரணம் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

புனேவின் கோரேகான் பகுதியில், ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சி நடப்பதாகவும், ஆனால், அரசு போதிய பாதுகாப்பு அளிப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆண்டுதோறும், தலித்துகள் தாக்கப்படுவதாகவும், இந்த ஆண்டுதான் பிரச்னை பெரிதாக வெடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர், தலித் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் மும்பையில் வன்முறை பரவிய நிலையில், மகாராஷ்டிர மக்கள் அமைதி காக்குமாறு, தலித் செயற்பாட்டாளரும் குஜராத் எம்எல்ஏ.வுமான ஜிக்னேஷ் மேவானி கேட்டுக் கொண்டுள்ளார்.