புதன், 3 ஜனவரி, 2018

குடியரசு தினமன்று செயல்பாட்டுக்கு வரும் ‘பெண்கள் பாதுகாப்பு பொத்தான்’ January 3, 2018

Image

பெண்கள் பாதுகாப்புக்காக செல்போனில் அவசர உதவி பொத்தான், செயல்படுத்தும் திட்டம் வரும் 26ம் தேதி அறிமுகப்படுத்தப்படுகிறது. 

இந்த திட்டம் முதன்முறையாக, சோதனைமுறையில் உத்தரபிரதேசத்தில் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகாகாந்தி தெரிவித்தார். 

கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொலைத் தொடர்புத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ஜனவரி 2017 முதல் உற்பத்தி செய்யப்படும் அனைத்து செல்போன்களிலும் அவசர உதவி பட்டனை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. 

இதற்காக சாதாரண போன்களில் 5 அல்லது 9 என்ற எண்களை அவசர உதவி பட்டன்களாக பயன்படுத்தலாம் எனவும், அவசர உதவி அழைப்பு இல்லாத ஸ்மார்ட் போன்களில் ஆன் அல்லது ஆப் செய்யும் பொத்தானை அவசர உதவி பொத்தானாக பயன்படுத்தலாம் என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் குடியரசு தினமான வரும் 26 முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.