புதன், 3 ஜனவரி, 2018

பீகாரை உலுக்கிய கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாளை தண்டனை அறிவிப்பு January 3, 2018

Image

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவ் உள்பட 15 பேருக்கு தண்டனை விவத்தை ராஞ்சி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் நாளை ஒத்தி வைத்துள்ளது. 

கால்நடைத் தீவனம் வாங்குவதற்காக, 89 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், லாலு உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகள் என கடந்த 23 ஆம் தேதி ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அதிரடியாக அறிவித்தது. 

இந்நிலையில், லாலுபிரசாத் யாதவ் உள்ளிட்டவர்களின் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட இருந்தது. இதற்காக, பாட்னா பிர்ஸா முண்டா சிறையில் இருந்து லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். 

இதனையடுத்து, கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவ் உள்ளிட்டோரின் தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.